Wednesday, June 2, 2010

காலத்தின் பயணம்



தாத்தா செய்த வேலையை 
அப்பா செய்யவில்லை ...

அப்பா செய்யும் வேலையை 
மகன் செய்ய போவதாக 
உறுதி இல்லை ...

மகன் செய்யபோகும் வேலையை 
அவன் மகன் செய்வான் என்று 
எந்த உத்திரவாதம் இல்லை ...

ஆனால் 

பாட்டி செய்த வேலையையே 
அம்மாவும் ....

அம்மா வேலையையே 
மகளும்... 

மகள் வேலையையே 
அவளின் மகளும் செய்கின்றனர் ...

ஏன் என அந்த 
அடுபடிக்கும்
தெரியவில்லை ...

என்பதே பாகுபாடு .

2 comments:

  1. இதில் மாற்றம் கொண்டு வர முதலில் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். நமது துணியை நாம் துவைக்க வேண்டும். உண்ணும் தட்டை கழுவி வைக்க வேண்டும் என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

    நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை
    ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை - என்ற கவிஞர் கந்தர்வனின் கவிதைதான் ஞபாகத்திற்கு வருகிறது

    ReplyDelete
  2. அருமையான வரிகள்! ஆனால் பதில் இல்லாத கேள்வி...

    ReplyDelete